தலைநகர் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்து வருகிறார். டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கெஜ்ரிவால் கோரிக்கை முன் வைத்து வருகின்றார். 


தற்போதைய மக்களவே தேர்தலிலும் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. 


இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க உதவினால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க ஆதரவு அளிப்போம். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராகவே உள்ளேன் என தெரிவித்துள்ளார். 


முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என ஏற்கனவே கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.