10,000 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களைக் கோரும் டெல்லி
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: தெற்கு டெல்லியில் 10,000 படுக்கைகள் கொண்ட கோவிட்-19 பராமரிப்பு மையங்களை இயக்குவதற்காக மருத்துவ பணியாளர்கள் தேவை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். செவ்வாய்க்கிழமையன்று எழுதிய கடிதத்தில், ஐ.டி.பி.பி மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Radha Soami Satsang Beas (RSSB) என்ற ஆன்மீக அமைப்பின் பரந்த வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர், உள்துறை அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ITBP என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி) மற்றும் ராணுவத்திடம் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கெஜ்ரிவால் கோரியுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பசுமையான சூழலில் அமைந்துள்ள Radha Soami Satsang Beas (RSSB) வளாகம் டெல்லி-ஹரியானா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
Read Also | இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?
1,700 அடி நீளமும் 700 அடி அகலமும் கொண்ட இந்த கோவிட் -19 சிகிச்சை மையத்தில் தலா 50 படுக்கைகள் கொண்ட 200 தடுப்புகள் அமைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ்.பி வளாகத்தில் உலகின் மிகப்பெரிய தற்காலிக COVID-19 பராமரிப்பு மையம் உருவாக்கபப்டுவதாக கடந்த வாரத்தில் டெல்லி அரசாங்கம் அறிவித்தது. நகரத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிப்பதற்காக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், COVID-19 அறிகுறியற்ற நோயாளிகளுக்கும், லேசான அறிகுறிகள் கொண்ட ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படக்கூடியவர்கள் இந்த தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
Read Also | Google Android டெவலப்பர் சேலஞ்ச்சில் வெற்றி பெற்ற 3 இந்தியர்கள்
பிற மாநிலங்களிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக டெல்லிக்கு வரத் தொடங்கினால் ஜூலை 31 ஆம் தேதிக்குள் டெல்லிக்கு ஒன்றரை லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். கோவிட் -19 தொற்று பாதிப்பு விரைவாக அதிகரிக்கும் என்று தரவுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், "இதுவரை சந்தித்திராத சவால்கள்" தனது அரசாங்கத்தின் முன் இருப்பதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
திங்களன்று, டெல்லியில் 2,909 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,000 என்றும், பலியானவர்களின் எண்ணிக்கை 2,233 என்றும் டெல்லியின் கொரோனா நிலவரம் அச்சம் தரும் தகவல்களை காட்டுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, தேசிய தலைநகர் டெல்லியில் நாள்தோறும் 3,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.