இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா?

சீனா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்வது அம்பலமாகியுள்ளது.  ஜூன் 15 முதல் இன்றுவரை சுமார் 40,300 முறை  சீன ஹேக்கர்கள் இந்திய சைபர் ஸ்பேஸைத் தாக்க முயன்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 23, 2020, 06:31 PM IST
இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த சதி செய்கிறதா சீனா? title=

புதுடெல்லி: சீனா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்வது அம்பலமாகியுள்ளது.  ஜூன் 15 முதல் இன்று வரை சுமார் 40,300 முறை  சீன ஹேக்கர்கள் இந்திய சைபர் ஸ்பேஸைத் தாக்க முயன்றனர். இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானவர்கள் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளன. 

எல்.ஏ.சி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC)) ஒருபுறம் ஊடுருவல் செய்கிறது.  மறுபுறம், இந்தியாவின் சைபர்ஸ்பேஸில் குள்ளநரித்தனமாக ஊடுருவ முயல்கிறது டிராகன். ஜூன் 15 முதல் தற்போதுவரை கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஜூன் 15 முதல் இன்று வரை 40,000 க்கும் மேற்பட்ட சீன ஹேக்கர்கள் இந்தியாவின் சைபர் ஸ்பேஸைத் தாக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது.

Read Also | 2.9 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை இலவசமாக லீக் செய்த சைபர் கிரிமினல்ஸ்!

பாதுகாப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த ஹேக்கர்களில் பெரும்பாலானோர் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் உள்ளனர். சீன ராணுவத்தின் சைபர் வார்ஃபேர் பிரிவின் (Cyber Warfare Wing) தலைமையகம் சிச்சுவான் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கூட, இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன அரசு இருக்கிறதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா சைபர் இன்டலிஜென்ஸ் பிரிவின் சிறப்பு ஐ.ஜி.யஷஸ்வி யாதவ், சீன ஹேக்கர்கள் இந்த தாக்குதலுக்கு இரண்டு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினார். Distributed Denial of Service என்பதை ஒருபுறம் பயன்படுத்துகிறார்கள். ஒரு பயன்பாட்டு சேவை வழங்குநரின் வலைத்தளமானது 1000 நபர்களின் கோரிக்கையை மட்டுமே கோரும் திறனைக் கொண்டிருந்தால், இந்த ஹேக்கர்கள் அதை ஹேக் செய்து இந்த திறனை 1 மில்லியனுக்கு எடுத்துச் செல்கிறார்கள், இதனால் முழு அமைப்பும் செயலிழக்க நேரிடும்.

இரண்டாவது "இன்டர்நெட் புரோட்டோகால் ஹைஜாக்" (Internet Protocol Hijack). இதில், ஹேக்கர்கள் ஒரு வலைத்தளம் அல்லது இணையக் கணக்கின் ஆன்லைன் போக்குவரத்தை சீனா வழியாக தங்களின் இலக்குக்குத் திருப்புகிறார்கள், இதனால் இது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

Read Also | கொரோனா வைரஸ்: பொதுமக்களை குறி வைக்கும் சைபர் குற்றவாளிகள் இன்டர்போல் போலீஸ் எச்சரிக்கை

இந்திய பாதுகாப்பு அமைப்புகள், இந்த சைபர் தாக்குதல்களை தோல்வியடையச் செய்திருப்பது, இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று யஷஸ்வி யாதவ்  கூறுகிறார்.  வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பம், அடிப்படை கட்டமைப்புத் துறை போன்ற முக்கியத் துறைகளே இந்த சைபர் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டிருந்தன என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் சீனாவின் குயுக்தி புத்தியை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது.

Trending News