குப்வாரா அருகே பன்ஞ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் தீவிரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 


இந்நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது. 


இந்த தாக்குதலில் கேப்டன் உட்பட ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.