புதுடெல்லி: பூட்டானில் (Bhutan) இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் (Cheetah Helicopter) இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு விமானிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று பிற்பகல் 1 மணியளவில் நடந்ததுள்ளது. ஒரு பைலட் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தார். மற்றோருவர் பூட்டான் இராணுவத்தின் பைலட் ஆவார். இவர் இந்திய ராணுவத்துடன் (Indian Army) சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த விபத்து பூட்டானின் யோங்ஃபுல்லா அருகே நடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு பூட்டானின் யூன்புலா (Younphula Domestic Airport) உள்நாட்டு விமான நிலையத்திற்கு அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவ பயிற்சி குழு (IMTART) என்பது பூட்டானில் உள்ள இந்திய ராணுவத்தின் பயிற்சி மையமாகும்.


இந்த விபத்துக்குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் (Col Aman Anand) கூறுகையில், பூட்டானின் யோங்ஃபுல்லா அருகே மதியம் ஒரு மணியளவில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மதியம் 1 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்த பிறகு விபத்துக்குள்ளானது. பயிற்சியில் இருந்த இந்த ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேச (Arunanchal Pradesh)  மாநிலத்தின் கிர்மு (Khirmu) பகுதி வரை தொடர்பில் இருந்தது எனக் கூறினார். 


விபத்துக்குள்ளான சீட்டா ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க இந்திய விமானப்படை மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேடப்பட்டது. தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.