நவீன யுத்தத்திற்கான சமூக ஊடகம் முக்கியமானதாகும். ஆனால் நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறியதாவது, சமூக ஊடகங்களை தடை செய்வதை விட பாதுகாப்புப் பயன்முறைக்கும், அதன் நலன்களைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். வீரர்களை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக் கூடாது என்று முற்றிலும் தடை செய்ய முடியாது. அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம். 


 



தற்போது சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. நவீன யுத்தத்திற்கான சமூக ஊடகம் முக்கியமானதாகும். ஆனால் இந்த சமூக ஊடகங்கள் மூலம் நமது எதிரிகள் உளவியல் ரீதியாக தாக்க செய்வார்கள். இதனால் நாம் ஏமாற்று படலாம். சமூக மீடியாவைப் பயன்படுத்தி சண்டையிடுவதற்கு உங்கள் எதிரிகள் உங்களை பயன்படுத்துவார்கள்.


இவை அனைத்தும் கவனத்தில் கொண்டுதான் வீரர்களை சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று கூறுகிறேன் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.