காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒரு விமானி உயிரிழந்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 


ஜம்மு கஷ்மீரின் குரேஸ் செக்டரில் உள்ள பாரம் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.


 



 


ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனி படர்ந்த பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


தேடுதல் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படை விசாரணைக்குழு அறிக்கை


விபத்து நடைபெற்ற இடத்தில் விமானி இறந்து கிடந்தார், துணை விமானி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்


ஹெலிகாப்டர் தரையிறங்கவிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது.


வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டரில் உள்ள குஜ்ரன் நல்லா அருகே விபத்து ஏற்பட்டது. மீட்புக் குழுக்கள் கால்நடையாக அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் விமான உளவுக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் நீலகிரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தனர்.


மேலும் படிக்க | முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நீலகிரி மலையில் விபத்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR