சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் ஒரு பகுதியாக தற்போது, காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போராவில், உள்ள மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் தீடிரென தாக்குதல் நடத்தினர். 




இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.


அதற்கு பதிலளித்த நேபால் சிங் "பொதுவாக ஒரு சின்ன கிராமத்தில் சண்டை நடந்தாலே பலர் காயமடைகிறார்கள். அப்படியிருக்கும்போது எல்லையில் பணி அமர்த்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் தாக்கப்படுவது இயல்புதான் என்றார்.


கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை!!


மேலும் அவர், தற்போது எந்த நாட்டில் ராணுவ வீரர்கள் உயிரிழக்காமல் இருக்கிறார்கள் சொல்லுங்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.



 மேலும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துடன் மத்திய அரசு எப்போதும்  துணைநிற்கும் என்றார்.