காஷ்மீரில், கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க, ஒருவரை ஜீப் முன் ராணுவத்தினர் கட்டி வைத்து சென்ற சம்பவம் மிகவும் சரியான செயல் என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புத்காம் என்ற பகுதியில், ஏப்ரல் 9-ம் தேதி இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு பணிக்காக ராணுவத்தை சேர்ந்த 53-வது ராஷ்டிரிய ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது இளைஞர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.


அப்போது ராணுவ மேஜர் ஒருவர், கற்களை வீசியவர்களில் ஒருவரை பிடித்து ஜீப் முன் கட்டி வைத்தனர். அதன் பிறகு ராணுவ வீரர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்பகுதியை கடந்து சென்றனர்.


இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து இருந்தார். 


இந்த சம்பவம் தொடர்பாக, ஏப்ரல் 15-ம் தேதி ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை.


இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவ வீரர்கள் செய்த காரியம் சரியான செயலே என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு காரியத்தை முடிக்க ராணுவ வீரர்கள் பல யுக்திகளை பயன்படுத்துவார்கள். அதுபோன்ற சமயங்களில் காரியத்தை முடிக்க வேண்டியது தான் முக்கியம். வழிமுறைகள் பற்றி கவலைப்பட தேவையில்லை எனவும் ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.