கடந்த செப்டம்பர் 29 ஆம் நாள் ஜம்மு - காஷ்மீர் எல்லையை தாண்டி சென்று நள்ளிரவில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை "சர்ஜிகல் ஸ்டிரைக்" மூலம் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழித்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வரும் செப்டம்பர் 29 ஆம் தேதியை "சர்ஜிகல் ஸ்டிரைக் தினம்" கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய நாளில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு, கண்காட்சி  போன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என யூஜிசி பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இரண்டாவது "சர்ஜிகல் ஸ்டிரைக்" தினம் கொண்டாட இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்த காணோளியை வெளியிட்டுள்ளது.