புதுடெல்லி: ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் பி.எஸ்.எப்., வீரருக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக பி.எஸ்.எப்., வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் வேறு சில பி.எஸ்.எப்., வீரர்களும், ராணுவ வீரர்களும் தங்கள் குறைகளை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். 


இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக்கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். 


இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண்ணை பிபின் ராவத் அறிமுகப்படுத்தினார். தங்களது குறைகளை +91 9643300008 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று பிபின் ராவத் கூறியுள்ளார்.