மும்பை: இன்று மும்பை டோங்ரியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. கட்டிடம் இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சுமார் 50-க்கு மேற்ப்பட்டோர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ அணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (என்.டி.ஆர்.எஃப்) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கட்டிடம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்பு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். டோங்ரியில் உள்ள அப்துல் ஹமீத் துர்கா, தந்தேல் தெருவில் காலை 11.40 மணியளவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.


இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பழையவை மற்றும் பாழடைந்தவையாக உள்ளது. இந்த வட்டாரத்தில் உள்ள சில கட்டிடங்களில் மறுவடிவமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றப்பட்டு உள்ளன. 


இதேபோல மற்றொரு இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதாவது கோவாண்டியில் உள்ள சிவாஜி நகரில் ஒரு கட்டிடத்தின் மேல் மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.