ஸ்ரீநகர்: நான் கைது செய்யப்படவில்லை என்றும், எனது சொந்த விருப்பப்படி நான் எனது வீட்டிற்குள் தங்கியிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பொய் சொல்கிறார் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஃபாரூக் அப்துல்லா எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் அந்த மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 


அப்பொழுது தேசிய மாநாட்டு கட்சி, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஃபாரூக் அப்துல்லா எங்கே? அவர் என்ன நிலையில் இருக்கிறார்? எனகே கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாரூக் அப்துல்லா கைதும் செய்யப்படவில்லை, அவரை யாரும் தடுத்தும வைக்கப்படவில்லை. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், தனது சொந்த வீட்டில் உள்ளார் எனகே கூறினார்.


இந்தநிலையில், இன்று தந்து வீட்டு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஃபாரூக் அப்துல்லா, நான் கைது செய்யப்படவில்லை என்றும், எனது சொந்த விருப்பப்படி நான் எனது வீட்டிற்குள் தங்கியிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்கிறார். நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளேன். 


நான் இந்தியன். நான் என் உரிமைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து போராடுவேன். இந்த் சூழ்நிலையில் இந்திய மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் வீடுகளுக்குள் சிறைவைக்கப்பட்டு உள்ளனர். 


எங்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டவுடன், எங்கள் மக்கள் வெளியே வருவார்கள். நாங்கள் போராடுவோம், நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். நாங்கள் துப்பாக்கி எந்துபவர்களோ, கையெறி குண்டு வீச்சுபவர்களோ, கல் வீசுபவர்களோ அல்ல, நாங்கள் அமைதியான முறையில் போராடுவதை நம்புகிறோம்.


எங்களின் ஒற்றுமையே எங்களுக்கு வலிமையைத் தரும். எங்கள் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். அவர்கள் மக்களைப் பிரிக்கலாம். ஆனால் இதயங்களைப் பிரிக்க முடியுமா? அவர்கள் எங்களை கொலை செய்ய விரும்புகிறார்கள். எனது மோசமான உடல்நிலையில் காரணமாக நான் மரணமடையக் கூட நேரலாம். எனது மகன் (உமர் அப்துல்லா) சிறையில் உள்ளார்.


எனது மாநிலம் பற்றி எரிகிறபோது, எனது மக்கள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள போது, எப்படி எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் ஏன் என் வீட்டிற்குள் தங்குவேன்? இது நான் நம்பும் இந்தியா அல்ல.


இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.