நாட்டின் எந்தவொரு குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும்; உங்கள் கேள்விக்கான பதில்
370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். முதலில் காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும். தற்போது அனைவரும் வாங்க முடியும்.
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்க பிறகு, பிற மாநிலத்தவரை திருமணம் செய்யும் உரிமை காஷ்மீர் பெண்களுக்கு கிடைத்துள்ளது.
இன்று (திங்கள்கிழமை) மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்க மத்திய அரசு முன்மொழிந்தது. பின்னர் சட்டப்பிரிவு 35 ஏவை நீக்கியது. இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். இதில், ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் இரண்டாவது யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா கூறினார்.
மோடி அரசாங்கத்தின் இந்த வரலாற்று நடவடிக்கைக்குப் பிறகு, இனி மாநிலத்தில் என்ன நடக்கும்? உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் இங்கே...
கேள்வி: ஜம்மு-காஷ்மீர் குறித்து மத்திய அரசு இன்று என்ன முடிவு எடுத்தது?
பதில்: மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிதடு வந்த 370 மற்றும் 35 ஏ சட்டபிரிவை நீக்கியது
கேள்வி: ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்கப்பட்டதால் என்ன நடந்தது?
பதில்: தற்போது வரை கிடைத்து வந்த சிறப்பு அந்தஸ்தை இழந்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்.
கேள்வி: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு நிலை முடிந்தால் என்ன நடக்கும்?
பதில்: ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனி சிறப்பு எதுவும் இருக்காது. மற்ற மாநிலங்களைப் போலவே, நாட்டின் சட்டமும் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும்.
கேள்வி: ஜம்மு காஷ்மீர் பெண்களை பிற மாநிலத்தவர்கள் திருமணம செய்துக்கொள்ள அதிகாரம் இல்லையா?
பதில்: முன்பு அப்படி இருந்தது. ஆனால் இப்போது அந்த சட்டம் செல்லாது. பிற மாநிலத்தவரை திருமணம் செய்யும் உரிமை காஷ்மீர் பெண்களுக்கு உள்ளது.
கேள்வி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்க முடியுமா? யாரெல்லாம் வாங்க முடியும்?
பதில்: 370 வது சட்டபிரிவை நீக்கிய பிறகு நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் குடிமகனும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். முதலில் காஷ்மீரிகள் மட்டுமே நிலம் வாங்க முடியும். தற்போது அனைவரும் வாங்க முடியும்.