தா.வெ.க பரிசு வழங்கும் விழா: மாணவர்களை வரவேற்ற விஜய்

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கியுள்ளது. இதில் தற்போது முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 /8

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. 

2 /8

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பரிசு, ஊக்கத்தொகை வழக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.  

3 /8

மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.   

4 /8

மாணவர்களை மோட்டிவேட் செய்யும் விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

5 /8

இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் மதிய விருந்து தயார் நிலையில் உள்ளது.

6 /8

தமிழக வெற்றிக் கழகத்தின் பரிசு வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. அதனுடன் இந்த நிகழ்ச்சியில் விஜயின் உரையாடலும் வைரலாகி வருகிறது.

7 /8

தற்போது விழா தொடர்பான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

8 /8

அத்துடன் விஜய் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.