மத்திய நிதி அமைச்சராக அருண் ஜேட்லி இன்று மீண்டும் பெறுப்பேற்றுக் கொண்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்று நாடு திரும்பிய அருண் ஜேட்லி அவர்கள் இன்று மீண்டும் நிதி அமைச்சராக பெறுப்பு ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்., "பிரதமர் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் பிரப்பித்த உத்தரவு அடிப்படையில் அருண் ஜேட்லி அவர்கள் மத்திய நிதி அமைச்சகம், பெருநிறுவன விவகார அமைச்சக்கதின் தலைவராக பெறுப்பு ஏற்றுக்கொள்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற நிலையில், அவர் வகித்து வந்த நிதி இலக்கா அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அளிக்கப்பட்டது.



இதன் காரணமாக சமீபத்தில் நடைப்பெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும், இடைக்கால பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். 


இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடித்த அருண் ஜேட்லி அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய ஜேட்லி அவர்கள் தற்போது மீண்டும் நிதி அமைச்சகத்திலும், கார்பரேட் துறை (பெருநிரன விவகாரம்) அமைச்சகத்திலும் பதவி ஏற்றுக்கொண்டார்.