புது டெல்லி: டெல்லி மதுபான ஊழல் (Delhi Liquor Scam) வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இன்று PMLA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவரை காவலில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அமலாக்க இயக்குநரகம் மூலம் முன்வைக்கப்படலாம். இதன் மூலம் அவரை விரிவாக விசாரிக்க வாய்ப்பு கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதை அடுத்து, இது குறித்த பல வித கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமலாக்க இயக்குநரகம் தன் வேலையை செய்கிறது என ஒரு தரப்பு கூறினாலும், அமலாக்க இயக்குநரகம், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு துறை போன்றவற்றை மத்திய அரசு தன் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தி வருவதாக மற்றொரு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பற்றி சமூக சேவகர் அன்னா ஹசாரே தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


தன்னுடன் ஒன்றாக சேர்த்து மதுவை ஒழிக்க போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் அதற்காக ஒரு கொள்கையே வகுத்தது தனக்கு வருத்தம் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 


கெஜ்ரிவால் கைது குறித்து அன்னா ஹசாரே கூறியது என்ன?


மதுபான விற்பனைக்கு எதிராக, மது பழக்கத்திற்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற ஒரு நபர் இன்று மது பானத்திற்காக ஒரு கொள்கையை உருவாக்குவது வருத்தமளிப்பதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். “இது எனக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தின் முன் எதையும் செய்ய முடியாது. அவர் கைதானதற்கு அவரது செயல்களே காரணம். சில வேலைகளை செய்யாமல் இருந்திருந்தால் கைதாகி இருக்க மாட்டார். கைதாகிவிட்ட பிறகு இனி சட்டப்படி எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். அதைப் பற்றி அரசு யோசித்து முடிவெடுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆமி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..


யார் இந்த அன்னா ஹசாரே? 


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே குரல் எழுப்பிய போது, ​​கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், குமார் விஸ்வாஸ், வி.கே.சிங் மற்றும் பல தலைவர்கள் அவருடன் இணைந்து அவரது போராட்டத்தில் கலந்துகொண்டனர். அன்னா ஹசாரே அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் குரு என்று அழைக்கப்படுகிறார். லோக்பாலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையில் அன்னா ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் UPA-2 அரசுக்கு எதிராக இருந்தனர். இருவரும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்கள் ஒரு வழியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பயணத்தின் அடித்தளங்களாக அமைந்தன.  


அன்னா ஹசாரேவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரிந்தது ஏன்?


அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் நுழைந்தவுடன், அவரது அரசியல் குருவாக இருந்து அன்னா ஹசாரே அவரை வழி நடத்துவார் என நம்பப்பட்டது. ஆனால், அன்னா ஹசாரேவிற்கு அரசியல் கட்சி அமைப்பதில் விருப்பமில்லை. எனவே அரவிந்த் கெஜ்ரிவால் அவரிடமிருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை நிறுவினார். பின்னர் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. டெல்லியில் ஆட்சி அமைக்கப்பட்டு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வரானார்.


மேலும் படிக்க | Donations: அரசியல் கட்சிகளுக்கு போட்டி போட்டு பணத்தை வாரி வழங்கிய கார்பரேட் நிறுவனங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ