ED பிடியில் டெல்லி முதல்வர்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
Arvind Kejriwal: ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிசிடிவி கவரேஜ் உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
Arvind Kejriwal: டெல்லி மதுபான ஊழல் (Delhi Liquor Scam) வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கைது செய்யப்பட்டார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குநரக ரிமாண்ட்க்கு அனுப்பப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் வைத்து விசாரிக்க இடி -க்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். விசாரணை தொடர்பான டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பிற பொருட்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை நேருக்கு நேர் ஆய்வு செய்து, கலால் ஊழலில் அவரது பங்கு குறித்து முழுமையான விசாரணைக்கு மீதமுள்ள குற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 வரை காவலில் வைக்கப்படுகிறார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விசாரணை பதிவு செய்யப்படும்
ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிசிடிவி கவரேஜ் உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மாலை 6 முதல் 7 மணி வரை, அரவிந்த் கெஜ்ரிவால் தனது இரண்டு வழக்கறிஞர்களை அரை மணி நேரம் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். இந்த நேரத்தில், அவர் தனது குடும்ப உறுப்பினர்களான சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பிபவ் குமார் ஆகியோரையும் அரை மணி நேரம் சந்திக்க முடியும்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு உணவு
தனக்கு உயர் இரத்த சர்க்கரை இருப்பதால், அரவிந்த் கெஜ்ரிவால் சில மருந்துகள் மற்றும் சிறப்பு வீட்டு உணவிற்கான கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த உணவுகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழலின் மன்னன் என்று ED கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால்... மக்களவை தேர்தலில் தாக்கம் இருக்குமா?
'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்': இதுவரை நடந்தது என்ன?
- டெல்லி மதுபான விற்பனைக் கொள்கை 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- விசாரணை தொடங்கும் முன்பே டெல்லியின் மதுபானக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.
- அப்போது மணீஷ் சிசோடியா டெல்லியின் கலால் துறை அமைச்சராக இருந்தார்.
- டெல்லி காவல்துறையின் EOW தவறான நடவடிக்கைகளின் சந்தேகத்தை வெளிப்படுத்தியது.
- டெல்லி எல்ஜி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
- சிபிஐ குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டப்பட்டார்.
- மனீஷ் சிசோடியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
- பணமோசடி வழக்கில் ED விசாரணையைத் தொடங்கியது.
- அக்டோபர் 4, 2023 அன்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரகத்தால் (Enforcement Directorate) கைது செய்யப்பட்டார்.
- விசாரணைக்கு அழைத்து இடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 நோட்டீஸ்களை அனுப்பியது.
- ஆனால், ED விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ED ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புகார் அளித்தது.
- அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
- அமலாக்க இயக்குநரகம் மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார்.
- மார்ச் 17 அன்று, அமலாக்க இயக்குநரகம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது சம்மன் அனுப்பியது.
- இந்த சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மார்ச் 19ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
- டெல்லி உயர்நீதிமன்றம் மார்ச் 21 அன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்கவில்லை.
- அதன் பிறகு மார்ச் 21 ஆம் தெதி அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்தது.
- மார்ச் 22 அன்று, அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 வரை அமலாக்க இயக்குநரக காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | பூட்டானின் "ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ" விருது பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ