இந்திய சினிமாவின் மிகப்பிரபலமான நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சற்று முன்னர் மும்பை சிறையிலிருந்து வெளிவந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 2 ஆம் தேதி, ஒரு சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் உட்கொண்டதற்காக ஆர்யன் கான் (Aryan Khan) உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். 



இந்த வழக்கில் ஆர்யான் கான் தரப்பில் ஜாமீன் கோரப்பட்ட நிலையில், மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கான் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 



ALSO READ: Aryan Khan Bail: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது


முன்னதாக, பல திரைப்படங்களில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஜூஹி சாவ்லா, ஆர்யான் கானை சிறையில் இருந்து விடுவிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகித்தார். ஜூஹி சாவ்லா, ஆர்யன் கானுக்கு ஜாமீன் உத்தரவாதம் வழங்க மும்பை அமர்வு நீதிமன்றத்துக்குச் சென்று அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு, நீதிமன்ற அதிகாரிகள் முன் ஜாமீன் பத்திரத்தை அளித்தார்.


ஆர்யன் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஷாருக்கானின் கார் ஆர்தர் ரோடு சிறைக்கு வெளியே காணப்பட்டது. இருப்பினும், ஷாருக்கான் தனது காரை விட்டு வெளியே வரவில்லை. அவரது மெய்க்காப்பாளர் ரவி சிங் வந்து அவரது 23 வயது மகனை அழைத்துச்சென்றார்.


முன்னதாக, ஆர்யன் கான் மற்றும் பிறரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. NCB சார்பாக, ASG அனில் சிங் வாதிட்டார். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட நம்பர் 1 (ஆர்யன் கான்) முதல் முறையாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் அல்ல, அவர் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அர்பாஸ் மற்றும் ஆர்யன் இருவரும் பால்ய நண்பர்கள். இருவரும் ஒன்றாக கப்பலில் சென்றனர். போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்டதால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவை இல்லை. மேலும் அவர்களை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல. எனவே இந்தக் குற்றத்தில் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் சிதைக்கப்படலாம் என்றும் ASG அனில் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் ஒரு பகுதியாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக NCB தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஆர்யன் கானின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனது வாடிக்கையாளரிடமிருந்து போதைப்பொருள் மீட்கப்படவில்லை என்று வாதிட்டார். வாட்ஸ்அப் அரட்டையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவர் மீதான குற்றசாற்றுக்கு உறுதியான ஆதாரமாக கருத முடியாது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: அதானி குழுமத்துக்கு ஒரு நியாயம்? ஷாருக்கானின் மகனுக்கு ஒரு நியாயமா? சீமான் கேள்வி


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR