Aryan Khan Bail: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது

Breaking News: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 28, 2021, 05:10 PM IST
Aryan Khan Bail: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்தது title=

மும்பை: ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அதாவது ஆர்யனுடன் முன்முன் மற்றும் அர்பாஸ் மெர்ச்சன்ட் ஆகியோரும் ஜாமீன் பெற்றுள்ளனர். இவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் ஜெயிலில் இருந்து வெளியே வரலாம் எனத் தெரிகிறது. ஆர்யனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார். 

ஆர்யன் கான் மற்றும் பிறரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. NCB சார்பாக, ASG அனில் சிங் வாதிட்டார். அப்பொழுது குற்றம் சாட்டப்பட்ட நம்பர் 1 (ஆர்யன் கான்) முதல் முறையாக போதைப்பொருள் பயன்படுத்துபவர் அல்ல, அவர் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அர்பாஸ் மற்றும் ஆர்யன் இருவரும் பால்ய நண்பர்கள். இருவரும் ஒன்றாக கப்பலில் சென்றனர். போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்டதால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவை இல்லை. மேலும் அவர்களை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல. எனவே இந்தக் குற்றத்தில் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், ஜாமீன் வழங்கினால் சாட்சியங்கள் சிதைக்கப்படலாம் என்றும் ASG அனில் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் ஒரு பகுதியாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக NCB தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அடுத்த வாரம் முதல் தீபாவளி விடுமுறை வர உள்ளதால், ஆர்யன் கான் வழக்கில் இன்று (வியாழன்) மற்றும் நாளை (வெள்ளி) இந்த இரண்டு நாட்கள் முக்கியமாக பார்க்கப்பட்டது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைகாதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 

இந்த இரண்டு நாட்களில் ஜாமீன் கிடைக்காவிட்டால் தீபாவளி விடுமுறை வரை சிறையில் இருக்க வேண்டும். இன்று (புதன்கிழமை) ஆர்யன் கானின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனது வாடிக்கையாளரிடமிருந்து போதைப்பொருள் மீட்கப்படவில்லை என்று வாதிட்டார். வாட்ஸ்அப் அரட்டையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவர் மீதான குற்றசாற்றுக்கு உறுதியான ஆதாரமாக கருத முடியாது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். 

இது தொடர்பாக, ஆர்யன் கானின் நண்பர்களான அர்மான் மெர்ச்சன்ட்டின் வழக்கறிஞர் மற்றும் முன்முன் தமேஜாவின் வழக்கறிஞர் சார்பில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இன்றைய விசாரணையில் ஆர்யன் கான் உட்பட மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News