ஜம்மு-காஷ்மீரில் 52 கிலோ மதிப்புள்ள வெடிபொருட்களை இராணுவம் மீட்டதை அடுத்து,  புல்வாமா (Pulwama) போன்ற தாக்குதல் தவிர்க்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை இந்திய ராணுவம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது,  மொத்தம் 416 பாக்கெட் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.


ஒவ்வொன்றும் 125 கிராம் எடை கொண்டது. மொத்தம்  52 கிலோ வரை எடை கொண்ட வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும்  50 டெட்டனேட்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


ஜம்மு-காஷ்மீரில் லெட்டாபோரா அருகே குறைந்தது 52 கிலோ வெடிபொருட்களை இந்திய ராணுவம் வியாழக்கிழமை மீட்டுள்ளதை அடுத்து புல்வாமா போன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படை  (CRPF)வீரர்கள் கொல்லப்பட்ட நெடுஞ்சாலைக்கு மிக அருகில், உள்ள ஒரு இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.