புதுடெல்லி: உலகம் முழுவதும் ஒரு புதிய கோவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை (டிசம்பர் 21) அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டம் முடிவடைந்த உடனேயே, மாண்டவியா ட்விட்டரில் அது குறித்த தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார். விழிப்புடன் இருக்கவும், "கண்காணிப்பை வலுப்படுத்தவும்" சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாடு தயாராக உள்ளது என்று அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரிக்கும் COVID-19 தொற்று பாதிப்புகள்


கோவிட்-19 கூட்டத்திற்குப் பிறகு, அவர் ட்விட்டரில், "சில நாடுகளில் COVID-19  தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இன்று நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். கோவிட் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். மேலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." என பதிவிட்டுள்ளார்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்


கூட்டத்திற்குப் பிறகு, NITI ஆயோக்கின் டாக்டர் VK பால், மக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "27-28 சதவீத மக்கள் மட்டுமே முன்னெச்சரிக்கை அளவை எடுத்துள்ளனர். மற்றவர்களை, குறிப்பாக மூத்த குடிமக்களிடம், பூஸ்டர் டோஸ் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பூஸ்டர் டோஸ் கட்டாயம் மற்றும் அனைவருக்கும் வழிகாட்டப்படுகிறது. நீங்கள் நெரிசலான இடத்தில் இருந்தால், முகமூடியைப் பயன்படுத்துங்கள். நோயாளிகள் அல்லது வயதில் மூத்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது."


கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர்கள், ஆயுஷ், மருந்துத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பால், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி கே பால் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) தலைவர் என்.எல் அரோரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 


கோவிட் அலைக்கு சமாளிக்க தயாராக உள்ள இந்தியா 


சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று பாதிப்புகள் மத்தியில் வெளியான அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், செவ்வாயன்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மரபணு வரிசைமுறை தொடர்பான சோதனைக்கு   தொற்று பாதித்தவர்களின் மாதிரிகளை இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு நெட்வொர்க் மூலம் தினசரி  அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். 


மேலும் படிக்க | மீண்டும் கோவிட் நோய் பரப்பும் மரபணு மாறிய கொரோனா! பிறழ்ந்த வைரஸின் ரெளத்ரம் 


கோவிட் உடனான போரில் தோல்வியடைந்துள்ள சீனா 


சீனாவில் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று நோயியல் நிபுணர்கள் குளிர்காலத்தில் சீனாவை குறைந்தது மூன்று அலைகள் தாக்கலாம் என கணிக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை திடீரென முடிவுக்குக் கொண்டுவர சீன அரசாங்கம் "தயாராக இல்லை" என்பது உறுதி என்று தி ஹாங்காங் போஸ்ட் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் அடுத்தடுத்து COVID நோய்த்தொற்றுகள் அதிகரிக்கலாம் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


மேலும் படிக்க | Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ