Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம்

Corona Updates: சீனா உட்பட 5 நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் பதற்றம் அதிகரித்துள்ளது... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிய இந்தியா...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 07:19 AM IST
  • சீனா உட்பட 5 நாடுகளில் கொரோனா மீண்டும் கொரோனா பீதி
  • இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம்
  • இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம் title=

Corona Updates: அண்டை நாடான சீனாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாயகமான சீனாவில் இருந்து மீண்டும் ஒருமுறை இந்த வைரஸ் இந்தியாவிற்கு வராமல் இருக்க சிறப்பு வியூகத்தை வகுத்து பணியை தொடங்கியுள்ளது இந்திய அரசு. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வெடித்ததை அடுத்து, இந்திய அரசும் உஷார் நிலையில் உள்ளது. சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன், மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது மத்திய அரசு.

கொரோனா பரவல் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு கலந்தாலோசனை கூட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட்டியிருக்கிறார். கொரோனா தொற்றைக் கையாள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு நடத்தப்படும்.  

அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது

இதற்கிடையில், சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மரபணு மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலயா? இது காரணமாக இருக்கலாம்

மரபணு பிறழ்வுகளை கண்டறிவதன் மூலம் அவற்றின் பரவலைக் கண்டறிந்து, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண கொரோனா பாதித்த அனைவருக்கும் ஏற்பட்டுள்ள கொரோனா வகை தொடர்பான மரபணு வரிசைமுறையை பதிவு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுளது.

INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) மரபணு வரிசைமுறையின் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் சோதனை விவரங்களை அரசு பெற முடியும்.

'மரபணு வரிசைமுறையுடன் கொரோனா பிறழ்வுகளை அடையாளம் காணவும்'

இந்த மரபணு வரிசையின் மூலம், வைரஸின் எந்த மாறுபாடு, அதிகமாகப் பரவுகிறது என்பதையும், எந்தப் பகுதியில் எந்த மாறுபாடு பரவுகிறது என்பதையும் கண்டறிய முடியும். வைரஸ் மாற்றமடைந்து,அதன் புதிய விகாரம் பரவினால் அதையும் கண்டறிய இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும். எனவே, இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரிப்பதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கிவிட்டது.

தற்போது இந்தியாவில் மொத்தம் 3490 பேருக்கு கொரோனாபாதிப்பு உள்ளது. இந்த வாரம் இந்தியாவில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Corona 4th Wave: குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தற்போது இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

சீனாவின் பயங்கரமான கோவிட் அலை மற்றும் இந்தியாவின் நிலைமை குறித்து அரசாங்கத்தின் கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தகவல்களை தெரிவித்தார். மூன்றாவது அலை ஓமிக்ரான் நோய்த்தொற்றை இந்தியா, சரியாக கையாண்டதாக அவர் தெரிவித்தார். தினமும் லட்சக்கணக்கான பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டாலும், தொற்று தீவிரமாகாமல் இருந்ததுடன், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது.

இதற்கு ஒரு முக்கிய காரணம், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  தடுப்பூசி மூலம் வழங்கப்பட்ட செயற்கை நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் கலவையாகும். இத்தகைய சூழ்நிலையில், சீனாவில் நிலவும் இந்த கோவிட் அலை இந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எந்தவிதமான அச்சத்தையும் பீதியையும் தவிர்க்க, நமது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று இந்திய அரசு கருதுகிறது.

மேலும் படிக்க | சீனாவில் கொரோனா! ஒமிக்ரான் மாறுபாடுகளால் லட்சக்கணக்கில் பாதிப்பு: எச்சரிக்கை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News