கமல்ஹாசனுக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் பிரபலம்...
கோட்சே ஒரு தீவிரவாதிதான் என கமல் கூறிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆந்திரா எம்.பி., அசாருதின் ஓவைசி!
கோட்சே ஒரு தீவிரவாதிதான் என கமல் கூறிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஆந்திரா எம்.பி., அசாருதின் ஓவைசி!
தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் "எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதாக என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு கமலின் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த அனைத்து இந்திய முஸ்லிம் கட்சியின் (ஏ.ஐ.எம்.ஐ.எம். ) எம்.பி., ஓவைசி கோட்சே ஒரு தீவிரவாதிதான் என தெரிவித்துள்ளார். "ஆம் கோட்சே ஒரு தீவிரவாதி தான். இவர் தேச தலைவர் மகாத்மாவை கொன்றவர், இந்த கொலைகாரனை சிறந்த மனிதர் என்றா அழைக்க முடியும் ? வேறு என்ன மாதிரி அழைக்க முடியும் ? தீவிரவாதி என்று தான் அழைக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.