Asaram Bapu: பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை
Asaram Bapu Life Imprisonment: பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்த குஜராத் காந்தி நகர் நீதிமன்றம்.
Asaram Bapu News Updates: ஆசிரம பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு ஐபிசி பிரிவுகள் 376 (2) (சி), 377 கீழ் இயற்கைக்கு மாறான செக்ஸ் மற்றும் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நேற்று குஜராத் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அவர் 2013 முதல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம், 2013 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை (ஜனவரி 30) தீர்ப்பளித்தது. தண்டனையின் அளவு குறித்த வாதங்களைக் கேட்டபின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.கே.சோனி இன்று, 2013-ம் ஆண்டு முன்னாள் பெண் சீடர் தாக்கல் செய்த பாலியல் பலாத்கார வழக்கில் 81 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காந்திநகரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்களன்று, ஐபிசி பிரிவுகள் 376 (2)(சி), 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்), 342 (சிறைவைப்பு), 506 (2) (குற்றவியல் மிரட்டல்), 354 (பெண்ணை தாக்குதல்) , மற்றும் 357 (தவறான முறையில் கட்டுப்படுத்துவதற்கான தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆசாராம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரை விடுதலை செய்தது.விடுவிக்கப்பட்டவர்களில் ஆசாராமின் மனைவியும் ஒருவர் ஆவார்.
மேலும் படிக்க: கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ