கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை

சூரத் கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Apr 30, 2019, 06:50 PM IST
கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை
Zee Media

அஹமதாபாத்: கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சுவாமி ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என சூரத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனையை இன்று (ஏப்ரல் 30 ) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவிதிருந்தது. 

இந்தநிலையில், இன்று கற்பழிப்பு வழக்கில் நாராயண் சாய்வுக்கு தண்டனையை அறிவித்தது சூரத் அமர்வு நீதிமன்றம். அதில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்வுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாராயண் சாய்க்கு ரூ .1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு சகோதரிகள் 2002 முதல் 2005 வரை எங்களை ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து எங்கள் இருவரையும் பாலியல் பலாத்தகாரம் செய்தனர் என அவர்கள் மீது கற்பழிப்பு புகார் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். டிசம்பர் 2013ல் ஹரியானா குருக்ஷேத்ராவுக்கு அருகே உள்ள பிப்லி கிராமத்தில் 40 வயதான நாராயண சாயி போலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.