தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் அல்லது ஆசியான் என்பது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, அமைதி, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 1967 இல் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தவில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது’ என்று கூறி கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை விதிகளின் அடிப்படையில் உருவாக்க அழைப்பு விடுத்திருந்தார்,


அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) - ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு மியான்மர் தூதர் மியொ கியாவ் ஆங், சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங், மலேசியா தூதர் சரவணகுமார், மியான்மர் கவுரவ தூதர் ரங்கநாதன், ஆசியான் வர்த்தக ஆணையர் திரு ஹர்விந்தர் பால் சிங்  மற்றும் இந்தோனேசியா தூதர், தாய்லாந்து நாடுகளின் பிரதிநிதிகளும் தலைமை வகித்தனர். 


மேலும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்


இந்த கூட்டத்தில் உலகின் முக்கிய இரு பிராந்தியங்களான  தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் இந்தியாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. உலகின் இரு பிராந்தியங்களிலும் வேகமாக மாறிவரும் அரசியல் நிலப்பரப்பு மற்றும் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான வழிமுறையான உறுதிப்பாட்டை இக்கூட்டம் தெளிவுபடுத்தியது. சர்வதேச ஒழுங்கு அடிப்படை விதிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் மற்றும் பலதரப்புவாதத்தை ஊக்குவித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


ஆட்கடத்தல் மற்றும் அகதிகள் நலம், கடல்சார் பாதுகாப்பு, நாடுகடந்த குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் வன்முறை, வறுமை, நிலையான வளர்ச்சி மற்றும் பருவனிலை மாற்றம் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் ஆசியான்-இந்தியா பேச்சுவார்த்தை உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான அரசியல் உத்வேகமும் உறுதி செய்யப்பட்டது.


மேலும் படிக்க | டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ