டெல்லி: அமிர்தசரஸில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்தாஜ் அசிஸின் இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வருகிற டிசம்பர் 4-ம் தேதி அமிர்தசரஸில் நடைபெறவுள்ள "ஹார்ட் ஆப் ஏசியன்" கான்பிரன்சில் பங்கேற்க இருப்பதாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிடம் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில், தாம் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யுரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் உயிர் நீத்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா வருகை தரும் முதல் பாகிஸ்தானிய மூத்த அதிகாரி சர்தாஜ் அசிஸ் ஆவார்.