சென்னை: நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பெருக்கம் பல மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பேரழிவை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில், பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கோரதாண்டவம் ஆடும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய நிலவரப்படி, அசாமில் (Assam) ஏற்பட்ட இந்த பேரழிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தின் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 24.19 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மழைக்கால வெள்ளம் மற்றும் கனமழையை சமாளிக்க 20 மாநிலங்களில் 122 மீட்பு குழு படை நியமித்துள்ளது என்று தேசிய பேரிடர் படை (என்.டி.ஆர்.எஃப்) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த குழுக்களை சேர்ந்த 12 அணிகள் அசாமில் உள்ளன.


ALSO READ | நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!


அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ஏ.எஸ்.டி.எம்.ஏ - ASDMA)) தினசரி வெள்ள அறிக்கையின்படி, நாகான் மாவட்டத்தில் ஒருவர், மொரிகானில் ஒருவர் இறந்தார். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.


மேகாலயா மாநிலம் பாதிப்பு: 
இதற்கிடையில், மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்  உயிரிழந்து உள்ளதாகவும், இயற்கை பேரழிவால் 1.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேகாலய முதல்வர் கொன்ராட் சங்மா தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.


ஐக்கிய நாடுகள் சபை கூட உதவ தயாராக உள்ளது:
ஐக்கிய நாடுகள் (United Nations) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்பட்டால் இந்திய அரசுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக தயாராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், “அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2254 கிராமங்களில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகவும், 189 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எங்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களில் பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. "தேவைப்பட்டால் இந்திய அரசாங்கத்திற்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது" என்று அவர் கூறினார். 


ALSO READ | சுமார் 129 ஆண்டுகளுக்கு அசாமில் பின் கண்டுபிடிக்கபட்ட அறியவகை பாம்பு..!


பீகாரில் 17 பேர் உயிர் இழந்தனர்
பீகாரில் இடியுடன் கூடிய மழையால் செவ்வாய்க்கிழமை 17 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பாங்காவைச் சேர்ந்த ஆறு பேரும், பிஹர்ஷரீப்பைச் சேர்ந்த நான்கு பேரும், ஜமுயிலிருந்து மூன்று பேரும், போத் கயாவைச் சேர்ந்தவர்களும், லாகிசராய் மற்றும் நவாடாவைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இடி மின்னல் காரணமாக  இறந்தவர்களுக்கு முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவரின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் எக்ஸ் கிராஷியா மானியம் வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். பேரழிவின் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தான் இருப்பதாக முதல்வர் கூறினார்.