Assam Cabinet On Muslim Marriage : பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் படியாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பின்னிரவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயந்த் மல்லபருவா, 'இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான அனைத்து விவகாரங்களும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்வு காணப்படும்' என்று தெரிவித்தார்.
 
அசாமில் முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான அரசாங்கம் முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இனி அசாமில் நடக்கும் ஒவ்வொரு திருமணமும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.


முஸ்லிம் பதிவாளர்களின் பணி முடிவுக்கு வந்தது


அசாம் மாநில அமைச்சரவையின் முடிவுக்குப் பிறகு, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் பணிபுரியும் 94 முஸ்லிம் பதிவாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், அவர்கள் விரைவில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க | போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு! அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்


அசாம் அரசின் இந்த முடிவு குழந்தை திருமணத்தை நிறுத்த உதவும் என அசாம் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அரசின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


குழந்தை திருமணம் நிறுத்தப்படும் 


'பிப்ரவரி 23 அன்று, அஸ்ஸாம் அமைச்சரவை ’பழைய அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டத்தை’ ரத்து செய்ய ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இந்தச் சட்டம் திருமணப் பதிவை அனுமதிக்கும் சில விதிகளை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கை அசாமில் குழந்தை திருமணத்தை தடை செய்வதற்கான மற்றொரு முக்கியமான படியாகும்’ என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.



'இந்த முடிவின் முக்கிய நோக்கம் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள சட்டத்தில் இருந்து மாறுவதாகும். அந்த காலத்திற்கு பொருத்தமாக இருந்த சட்டங்கள், இது இன்று பொருத்தமற்றதாகிவிட்டது. இந்த சட்டத்தின் கீழ், வயது குறைவானவர்களுக்கும், குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. 21 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 வயதுக்குட்பட்ட பெண்களும் திருமணம் செய்து கொள்ளும் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு படியாகவும் இது உள்ளது’ என்று அசாம் மாநில அரசு தெரிவிக்கிறது.


உத்தரகாண்ட் வழியில் அசாம்
மூன்று வாரங்களுக்கு முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலம் சிவில் சட்டத்தை நாட்டில் முதன்முதலில் அமல்படுத்திய மாநிலமாக மாறியது. அதற்கு அடுத்து, இதுபோன்ற வழியில் முக்கிய முடிவை அசாம் மாநில அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிபடுத்திய அமைச்சர் ஜெயந்த் மல்லபருவா, அமைச்சரவையின் இந்த முடிவு, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை நோக்கிய ஒரு பெரிய படி என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | UCC: உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக அரசு பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகம் செய்தது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ