குவாஹாட்டி: IIT-யின் நுழைவுத் தேர்வான JEE Mains தேர்வில், 99.8% மதிப்பெண்களைப் பெற்று அசாமில் முதலிடம் பெற்ற மாணவரை அசாம் காவல்துறை கைது செய்தது. அந்த மாணவர் தனக்கு பதிலாக மற்ற ஒருவரை தேர்வு எழுத வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாணவரின் JEE Mains தேர்வில் மதிப்பெண் 99.8 சதவீதமாகும். ஒரு மருத்துவரான அந்த மாணவரின் தந்தையும் அவரது மூன்று கூட்டாளிகளும் இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


செப்டம்பர் 5 ஆம் தேதி நடந்த தேர்வில் அந்த மாணவர் பங்கேற்கவில்லை என அக்டோபர் 23 ஆம் தேதி, மித்ரதேவ் ஷர்மா என்ற நபர் புகார் அளித்தார்.


குவஹாத்தியில் (Guwahati) உள்ள ஒரு மையத்தில் வேறு யாரோ தேர்வு எழுதியதாக சர்மா கூறினார். புகார் அளிக்கப்பட்ட பின்னர் போலீசார் சிலரை கைது செய்தனர்.


இந்த கூற்றுக்களை விசாரிக்க காவல்துறை ஒரு சிறப்பு குழுவை அமைத்தது. இதைத் தொடர்ந்து பின்னர் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.


ALSO READ: NEET 2020 Topper: 720/720 எடுத்த Shoyib Aftab-ன் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?


இந்த சம்பவத்தில் மாணவர் மற்றும் அவரது தந்தையைத் தவிர கைது செய்யப்பட்ட மூன்று நபர்களின் பங்கை பற்றி காவல்துறை வெளியிடவில்லை.


அந்த மாணவர் தான் செய்த மோசடி குறித்து ஒரு நண்பரிடம் தொலைபேசியில் கூறினார். அந்த தொலைபேசி அழைப்பு பதிவு செய்யப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.


இருப்பினும், நண்பருக்கும் புகார்தாரருக்கும் உள்ள தொடர்பும் தெளிவாக இல்லை.


தேர்வு நடந்த நாளில், மாணவர் போர்ஜார் பகுதியில் உள்ள குறிப்பிட்ட மையத்திற்கு சென்றார். ஆனால் ஒரு இன்விஜிலேட்டரின் உதவியுடன் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதவியை தந்துவிட்டு வந்ததாகவும் மற்றொருவர் அந்த தேர்வை எழுதியதாகவும் கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தில் குவஹாத்தியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் சம்பந்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


JEE Mains தேர்வில் இந்த மாணவர் 99.8 சதவீதம் மதிப்பெண் பெற்றார்.


நாடு முழுவதும் இந்த தேர்வை நடத்திய தேசிய தேர்வு ஆணையத்தை (NTA) காவல்துறை அணுகியுள்ளது. விசாரணையில் அவர்களுக்கு உதவ JEE Mains தேர்வு தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கூறியுள்ளது. 


ALSO READ: தவறாக வெளியிடப்பட்ட NEET மதிப்பெண்ணால் பரிதாபமாக மாணவி தற்கொலை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR