டெல்லி: ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய கர்நாடகா பாஜக மாநில தலைவர் பி.எஸ். எடியூரப்பா, விரைவில் கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் எனக் கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்ற) ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜேடிஎஸ் 38 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் இணைத்து எச்.டி.குமாரசுவாமி தலைமையில் ஆட்சி நடைபெறு வருகிறது.


ஆனால், மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியின் எம்.எல்ஏ.-க்களை பாஜக பக்கம் இழுக்க முயற்ச்சிகள் நடைபெறு வருகிறது. இந்த விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.


2019 மக்களவை தேர்தல் நடந்து முடிந்தவுடன் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததும் கர்நாடாவில் ஆட்சி மாற்றம் ஏற்ப்படும் என கர்நாடகா மாநில பாஜக தலைவர்கள் கூறினர்.


தற்போது பாஜகவிடம் மொத்தம் 105 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றன. ஆட்சி அமைக்க இன்னும் குறைந்தது 8 எம்எல்ஏ-க்கள் தேவை. இந்தநிலையில்,  ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய கர்நாடகா பாஜக மாநில தலைவர் பி.எஸ். எடியூரப்பா, விரைவில் கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் எனக்கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.


மேலும் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். எனவே அந்த ஆட்சியை விரைவில் மக்கள் அகற்றுவார்கள். அப்படி ஆட்சி கவிழ்ந்தால், புதிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக இருகிறது. அதேவேளையில் ஜேடிஎஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்ப்பட்டால், நாங்கள் அதற்க்கு தயாரா இல்லை எனவும் கூறினார்.