விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை யாராலும் மறக்க முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வம்சாவழியை சேர்ந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலத்தை அனுப்பியது.  STS-107 என்ற அந்த விண்கலத்தில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்கள் பயணித்தனர். அவர்கள் தங்கள் மிஷனை மீண்டும் பூமிக்கு திரும்பிய போது விண்கலம் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தார். 


கல்பனா சாவ்லாவை கவுரவிக்கும் வகையில், அமெரிக்கா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை எடுத்து செல்லும் விண்கலத்திற்கு நாசாவின் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவாக, அவரது பெயரை சூட்டியுள்ளது. 


விண்வெளித்துறையில் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டுள்ளது.


கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் ஆவார்.


அமெரிக்க உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரஹ்மான்,  2003 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் விண்கலத்தில் ஆறு பேர் கொண்ட குழு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட மிஷன்  நினைவாக "எஸ்.எஸ். கல்பனா சாவ்லா" என்று பெயரிடப்படுவதாக அறிவித்தார். 


 "நாசாவில் வரலாறு படைத்த கல்பனா சாவ்லாவை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையை நாங்கள் கவுரவிக்கிறோம். மனிதர்கள் ஏற்றிச் சென்ற விண்கலம் தொடர்பான மிஷனில் அவர் அளித்த பங்களிப்பு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். " என அந்நிறுவனம் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.


நிறுவனம் தனது இணையதளத்தில், "முன்னாள் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பெயரை என்ஜி -14 சிக்னஸ் ( NG-14 Cygnus) விண்கலத்திற்கு பெயரிடுவதில் நார்த்ரோப் கிரஹ்மன் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மிஷனில் முக்கிய பங்கு வகித்த நபர்களை கவுரவிப்பது நிறுவனத்தின் பாரம்பரியமாகும்" என கூறியுள்ளது.


"விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி  என வரலாற்றில் தனது முக்கிய இடத்தை பெற்றுள்ள அவரை கவுரவிப்பதற்காக சாவ்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்" என்று அவர் கூறினார்.


ALSO READ | விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் 'பாடி பில்டர்களாக' திரும்பின...!!!