விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் 'பாடி பில்டர்களாக' திரும்பின...!!!

விண்வெளி வீரர்கள் நீண்ட நாள் விண்வெளியில் கழிக்கும் போது அவர்கள் எலும்புகள் மற்றும் தசைகள் சேதமடைவதைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

Updated: Sep 10, 2020, 06:02 PM IST
விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் 'பாடி பில்டர்களாக' திரும்பின...!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International space station)   பல மாதம் விண்வெளியில் கழித்த எலிகள், தங்களை தசைகளை வலுப்படுத்திக் கொண்டு திரும்பியுள்ளது என விஞ்ஞானிகள் கூறினார்.

விண்வெளி வீரர்கள் நீண்ட நாள் விண்வெளியில் கழிக்கும் போது அவர்கள் எலும்புகள் மற்றும் தசைகள் சேதமடைவதைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான சில எலிகளை விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பபினர். 

இந்த ஆராய்ச்சி நீண்ட விண்வெளி பயணங்களின் போது  ஏற்படும் தசைகள் மற்றும் எலும்புகள் வலு இழப்பிலிருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் இந்த ஆய்வு கூட தசை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக சக்கர நாற்காலிகளில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

டாக்டர் சி-ஜின் லீ தலைமையில் கனெக்டிகட்டின் ஜாக்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழு இந்த பரிசோதனையை மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் 40 இளம் பெண் கருப்பு எலிகள் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த தகவலை லீ தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் வழங்கினார்.

இந்த 40 எலிகளில், 24  எலிகளுக்கு மருந்து ஏதும் கொடுக்கப்படாமல் அனுப்பப்பட்டன, அவை திரும்பும்போது அவர்களின் தசை மற்றும் எலும்பு எடை 18 சதவீதம் வரை குறைந்திருந்தது. ஆனால் மருந்து கொடுக்கப்பட்ட அனுப்பப்பட்ட எலி, தசைகள் மேலும் வலுப்பெற்று பாடி பில்டர்களைப் போல் திரும்பி வந்துள்ளன. 

மருந்து கொடுக்கப்பட்ட எலிகள் எடை குறையவில்லை என்பதோடு, தசைகளும் வலுப்பெற்றுள்ளது. இந்த எலிகளின் தசைகள் அமெரிக்க விண்வெளி அமைப்பின் நாசா விண்வெளி மையத்தில் வைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த எலிகளின் தசைகளுடன் ஒப்பிடப்பட்டன.

ஸ்பேஸ்எக்ஸின் காப்ஸ்யூல்  மூலம் விண்வெளிக்கு அனுப்பபட்ட அனைத்து 40 எலிகளையும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன. இந்த எலிகள் ஜனவரி மாதம் கலிபோர்னியா கடற்கரையில் பசிபிக் கடலில் பாராசூட் செய்யப்பட்டன. இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு வரமாக இருக்கும்.

ALSO READ | அட…. இந்த பாட்டரில சார்ஜ் செஞ்சா அடுத்த 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜே செய்ய வேண்டாமா!!