பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி  மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது ஆளும் பாஜக அரசு பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமானது.


நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை கொடுத்தார் என சொல்ல முடியுமா?  கடந்த 45 ஆண்டில் இல்லாததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.


கடந்த 70 ஆண்டுகளில் எந்த அரசும் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எடுத்தது கிடையாது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.


வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை மற்றும் 15 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்து அவர் பேசுவதே இல்லை., தனக்கு எழுதி தருபவற்றை பிராம்டரை பார்த்து படிக்க மட்டும் செய்கிறார். எது பேச வேண்டும் என எழுதி தருவதை மட்டுமே படிக்கிறார். காலம் அதனை மாற்றும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.