வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைகிடம் -AIIMS!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என டெல்லி AIIMS அறிக்கை வெளியிட்டுள்ளது!
11:13 16-08-2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என டெல்லி AIIMS அறிக்கை வெளியிட்டுள்ளது!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 9 வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவருக்கு வயது 93. அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை குறித்து விசாரிக்க நேற்று பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு சென்றார்.
இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலை பற்றி விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர், அமித் ஷா ஆகியோர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். மேலும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர், நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர்.