கேட்டதை விட 5 மடங்கு பணம் - ஏடிஎம் மையத்தின் முன் குவிந்த மக்கள்
மகாராஷ்டிராவில் உள்ள ஏடிஎம் ஒன்றில் நாம் கொடுத்த தொகையை விட 5 மடங்கு பணம் வந்ததால், ஏராளமான மக்கள் ஏடிஎம் முன்பு குவிந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றார். ஆனால், ரூ.2,500 ஏடிஎம்-ல் இருந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது மீண்டும் ரூ.2,500 வந்தது.
இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே ஏடிஎம்-ல் பணம் எடுக்க ஏராளமானோர் திரண்டனர். வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஏடிஎம்-ஐ மூடினர்.
இதனைத் தொடர்ந்து வங்கிக்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஏடிஎம்-ல் ரூ.100 நோட்டுகளை வைக்க வேண்டிய தட்டில் ரூ.500 நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் தொடரப்படவில்லை.
மேலும் படிக்க | நல்ல செய்தி: ஓய்வுபெறும் வயது, பென்ஷன் தொகையில் அதிகரிப்பு, அரசு பரிசீலனை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR