காஷ்மீரை சீர்குலைக்க நமது எதிரிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: எல்லை பாதுகாப்பு படை (BSF) தனது 55 வது உயர்த்தும் தினத்தை டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய BSF இயக்குநர் ஜெனரல் விவேக் குமார் ஜோஹ்ரி, எல்லை என்றாலும் ஊடுருவுவதற்கு இந்திய எதிர்ப்பு சக்திகளால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் இந்த பிரச்சினையை சமாளிக்க BSF நடவடிக்கை எடுக்கிறது.


பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளை ஒட்டியுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதிகளை இரவு, பகலாக கண்காணித்து ஊடுருவல் நிகழாமல் பாதுகாக்கும் பணியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் இன்று நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்,  வீரர்கள் தங்களது குடும்பத்தாருடன் இணைந்திருப்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை அளிக்க மத்திய அரசு தன்னால் இயன்றதை செய்து வருவதாக தெரிவித்தார்.



மேலும், துணை ராணுவத்தினருக்கு உள்ளதுபோல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டெல்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டெல்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டார்.