இந்தியாவின் லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுக்க முயன்ற போது மூண்ட பயங்கர சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  ஆனால், சீனா தனது தரப்பில் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை என மறுத்து வந்தது. பின்னர் நான்கு பேர் மட்டுமே இறந்ததாக அறிவித்தது.


இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில், இந்திய துருப்புக்களுடன் (Indian Army) நடந்த மோதலின் போது சீன மக்கள் விடுதலை இராணுவம் நான்கு அல்ல, 42 வீரர்களை இழந்தது என ஆஸ்திரேலிய செய்தித்தாள் The Klaxon வியாழன் அன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய செய்தித்தாள் அறிக்கையின் குறித்து இந்திய பாதுகாப்பு  அமைச்சகம் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


பத்திரிக்கை ஆசிரியர் அந்தோனி கிளான் வெளியிட்ட அறிக்கையில், தி கிளாக்சன் தரப்பில் சுமார் ஒன்றரை வருடம் நடத்திய ஆய்வில் திரட்டப்பட்ட சான்றுகள், அதிக அளவில் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றன என தக்வல் வெளியாகியுள்ளது. சீனா கலவான் பள்ளத்தாக்கு மோதால் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இரண்டுமே  திரிக்கப்பட்டவை என ஆஸ்திரேலிய பத்திரிக்கை கூறுகிறது. 


ALSO READ | Ladakh-ல் வலுவாக கால் ஊன்றியுள்ள இந்திய ராணுவம்.. அஞ்சி நடுங்கும் சீனா...!!!


நள்ளிரவில் இந்திய வீரர்களுடன் நடந்த மோதலின் போது சீன வீரர்கள் கடும் குளிரில் உறையும் நிலையில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்றனர் என்றும் அப்போது பல சீன வீரர்கள், கடும் குளிரின் காரணமாக,  நீந்த முடியாமல் ஆற்றில் மூழ்கினர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 



முன்னதாக, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில் இந்திய மற்றும் சீன இராணுவ அதிகாரிகள் எல்லையில் ஒரு பொதுவான மண்டலத்தை ஒப்புக்கொண்டதாக அறிக்கை கூறியது. பொதுவான மண்டலம் உருவாக்கப்பட்ட போதிலும், கூடாரங்களை அமைப்பது, கனரக இயந்திரங்களை அப்பகுதிக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட சட்டவிரோத உள்கட்டமைப்பை சீனா உருவாக்கி வந்ததாக அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


சீனா பரஸ்பர ஒப்பந்தத்தை மீறியது எனவும் இந்தியாவினால் கட்டப்பட்ட பாலத்தை உடைக்க PLA வீரர்கள் வந்தனர் என  அறிக்கைகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 


ALSO READ | சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR