அயோத்தி வழக்கில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1992–ம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.


பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.


ஆனால் இத்தீர்பில் உடன்படு இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து மேல்முறையீட்டு வழக்குகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இன்று வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய இடத்தில் மருத்துவமனை கட்டவேண்டும் என ஷியாம் பனேகல் என்பவர் தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார். இவ்வழக்கு விசாரணையில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய மூன்று தர்ப்பை தவிர புதிதாக எந்த அரசியல் கட்சிகளோ, இயங்கங்களோ உள்ளே நுழைய கூடாது என தலைமை நீதிபதி  மிஸ்ரா கூறினார்.


இவ்வழக்கை வெறும் நிலப்பிரச்சனையாக மட்டுமே அனுகவேண்டும் எனவும், நீதிமன்றம் அவ்வாறே அணுகுவதாகவும் நீதிபதி கருத்து கூறினார். மேலும், இவ்வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் மற்றும் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.