WATCH VIDEO: விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி, சரயு நதிக்கரையில் ஒளிரும் விளக்குகள்
அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை எதிர் நோக்கி, அதனை கொண்டாடுவதற்காக அந்நகரம் தயாராகி வருகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை எதிர் நோக்கி, அதனை கொண்டாடுவதற்காக அந்நகரம் தயாராகி வருகிறது.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
ஏற்கனவே விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்யாவில் எங்கு பார்தாலும் தீபத்தின் ஒளியை காணலாம். தீபாவளி போன்ற தோற்றம் அளிக்கிறது.
இதை அடுத்து, அயோத்தியாவில் உள்ள ஜெய்சிங்பூர் வித்யா குண்ட் என்னும் கிராமத்தில் உள்ள குயவர்கள், அகல விளக்குகளை தயாரிப்பதில் பிஸியாக உள்ளனர்.
சுமார் 1.25 லட்சம் அகல விளக்குகளுக்கான ஆர்டர் குவிந்துள்ளது.
இதை அடுத்து, பூமி பூஜையை முன்னிட்டு தேவைப்படும் அகல விளக்குகளை செய்வதற்கான பணி அக்கிராமத்தில் உள்ள 40 பேரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியுடன் ராமர் கோயில் பூமி பூஜைக்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை நடத்தும் போது, அந்த இடம் தீபாவளியை போல் இருக்கும் என்றும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | அமெரிக்காவில் அயோத்யா: ஆகஸ்டு 5-க்கு தயாராகிறது டைம்ஸ் சதுக்கம்!!
பூமி பூஜைக்கு பிறகு கோவில் கட்டுமானப்பணி தொடங்கப்படும்.