உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தி பிரச்சினை என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும்.


இந்த தீா்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் 10 வார காலத்திற்குள் ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து சமா்ப்பிக்குமாறு உத்தரபிரதேச அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனையும் தெரிவித்தது.


ஆனால், இவ்விவகாரத்தில் அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட ஷியா பிரிவினர் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடை பெற்றது. 


இந்நிலையில் தற்போது, அயோத்தி வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. 


மேலும், வக்பு வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டால் நாங்கள் விசாரணையை புறக்கணிப்போம் என்றும் கூறி உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.