மணியோசை, வாத்திய இசை, வானிலிருந்து மலர் மழை.... சொர்க்கமாக காட்சி தரும் அயோத்தி!!
Ayodhya Ram Temple: ராமரின் கற்பூர ஆரத்தியின் போது ஒலிப்பதற்காக, பாலிவுட் மற்றும் வணிக உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தவிர, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் மணிகள் வழங்கப்பட்டுள்ளன.
Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோவிலில் இன்று தொடங்கியுள்ள கும்பாபிஷேக விழாவில், நாடு மற்றும் உலகின் பல பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு, கற்பூரம் காட்டப்பட்ட பின்னர் ராமரின் நகரமான அயோத்தி முழுவதும் மணி ஓசை கேட்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், இந்திய ராணுவமும் ஒரு முக்கிய பொறுப்பை வகிக்கப் போகிறது.
ராமரின் கற்பூர ஆரத்தியின் போது ஒலிப்பதற்காக, பாலிவுட் மற்றும் வணிக உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தவிர, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் மணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மணிகள் அனைவரது கைகளிலும் இருக்கும். அனைத்து விருந்தினர்களும் ஆரத்தியின் போது இந்த மணிகளை ஒலிக்கச் செய்வார்கள்.
அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவம் ஒரு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இராணுவப் படை வீரர்கள் அயோத்தியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் மழை பொழிவார்கள். வளாகத்தில் 30 கலைஞர்கள் வெவ்வேறு இந்திய இசைக்கருவிகளை வாசிப்பார்கள். ஒரே நேரத்தில் இந்த வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். இவை அனைத்தும் இந்திய கருவிகளாக இருக்கும்.
பிராண பிரதிஷ்டை (Pran Pratishta) விழாவில் கலந்து கொள்ளும் 300 உயரதிகாரிகளின் பட்டியலை உத்தரபிரதேச அரசு வழங்கியுள்ளது. மாநிலத்தில் விருந்தினர்களுக்கான நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை சுமார் 150 விஐபிக்கள் அயோத்தியை அடைந்தனர். மீதமுள்ளவர்கள் திங்கள்கிழமை காலை முதல் வந்த வண்னம் உள்ளனர்.
“மாநில விருந்தினர்களுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தனிப்பட்ட தொடர்பு அதிகாரிகளைக் கொண்ட எஸ்கார்ட் வாகனம் வழங்கப்படும்,” என்று அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார். அனைவருக்கும் Z பிரிவு ப்ரோடோகால் வழங்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் அனைவரும் முன்னரே நிச்சயிக்கப்பட்ட ஹோட்டல்கள், டெண்ட் சிடிக்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் பொருத்தமான தங்குமிடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க | அயோத்தி: பால ராமர் சிலையின் முக்கியமான சிறப்புகள்..!
ராமர் கோவிலின் (Ayodhya Ram Temple) கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை அயோத்தி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை கோயில் நகரமான அயோத்தியில் இருப்பார். பிரதமர் ராமர் கோவிலுக்குச் செல்லும் வழி முழுதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சாகேத் டிகிரி கல்லூரிக்கும் ஜென்மபூமி பாதைக்கும் இடையே உள்ள முழுப் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்த நடைபாதையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சாகேத் டிகிரி கல்லூரிக்கு பிரதமர் மோடி சென்றடைவார் என்றும், அங்கிருந்து ராமர் கோயிலுக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 11.30 மணி முதல் கும்பாபிஷேகத்தின் இறுதி கட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார்.
ஒரு வேளை பனிமூட்டம் அதிகமாக இருந்தால், அந்த நேரத்தில் என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் உள்ளாட்சி நிர்வாகம் திட்டத்தை தயாரித்துள்ளது. “அந்தச் சூழ்நிலையில், பிரதமர் விமான நிலையத்தில் இருந்து தேதி பஜார் ரயில்வே மேம்பாலம் வழியாக ராமர் பாதைக்கு சாலை வழியாகக் அழைத்து செல்லப்படுவார்” என்று அயோத்தியில் நியமிக்கப்பட்ட ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க | Ayothi Ramar Temple: ராமர் கோவில் கும்பாபிஷேகம் எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1 width="100%">