அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி முழு விவரம்

ayodhya ram temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், அதுதொடர்பான நிகழ்ச்சி நிரல் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 22, 2024, 08:06 AM IST
  • அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
  • இன்று காலை 12.15 மணிக்கு நடைபெறுகிறது
  • நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி முழு விவரம் title=

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. திறப்பு விழாவுக்கு முந்தைய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 100க்கும் மேற்ட்ட ஆச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்துகின்றன. அனைத்து வழிபாடுகளும் நிறைவு பெற்ற பிறகு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மதியம் நடைபெற இருக்கிறது. 

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேரம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மதியம் 12.05 மணிக்கு தொடங்குகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்க உள்ளது. இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ⁠இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார். 

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!

ராமர் கோயில் திறப்பு விழாவில் முக்கிய பிரபலங்கள்

ராமர் கோயில் திறப்பு விழாவில் மொத்தம், 3 ஆயிரம் வி.வி.ஐ.பி.,க்கள் உள்பட, 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். இதனால் அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய மாநிலத்தை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அயோத்தி ராமர் கோயில் எங்கு அமைந்துள்ளது? 

அயோத்தி ராமர் கோயில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் சராயு நதிக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் அமைந்துள்ளது. 

பொதுமக்கள் எப்போது முதல் தரிசிக்கலாம்? 

கும்பாபிஷேக நாளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாளை முதல் அனைத்து மக்களும் பால ராமரை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் கலந்து கொள்ள https://srjbtkshetra.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். தற்போது முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவில்லை. ஓரிரு தினங்களில் இந்த வசதி வரும் எனத் தெரிகிறது.

நீட்டிக்கப்படும் தரிசன நேரம்

ராமர் கோயிலுக்கு இணையதளத்தில் பொது மக்கள் நன்கொடை அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கோயில் திறக்கப்பட்ட பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நள்ளிரவு வரை தரிசன நேரத்தை நீட்டிக்கவும் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. 

மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

Trending News