பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.


பாபர் மசூதி இடிப்பு வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டும் என்பதால் சாட்சிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாரும் அதிக வாய்தா பெற்று கால தாமதம் செய்ய வேண்டாம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது அதற்கான விசாரணை பணியில் ஈடுபட்டுள்ளது.


இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


ஏற்கனவே, இவ்வழக்கில் இருந்து கல்யாண் சிங் விடுவிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.