உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று.


நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பனி மூடிக்கொள்வதால் குளிர் காலம் முழுவதும் கோயில் மூடப்படும். குளிர்காலம் முடிந்த பின், நடை திறக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்காக இந்தாண்டு கோயில் திறக்கப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உலகப் புகழ் பெற்ற பத்ரிநாத் கோயில் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது என கோயில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


தென் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ரயில், விமானம், பஸ் டிக்கெட் புக்கிங் மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்தல் போன்ற காரணங்களுக்காக முன்கூட்டியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக கோயில் தரப்பில் கூறப்பட்டது.