பஜ்ரங்க் தள அமைப்பின் தொண்டர் ஹர்ஷா படுகொலை; சிமோகாவில் பதற்ற நிலை
ஹிந்து ஆதரவு கூட்டமைப்பின் செயலாளர் ஹர்ஷாவின் கொலையால் சிவமொக்காவில் நீறு பூத்த நெருப்பு போன்ற நிலைமை நீடித்து வருவதுடன் இந்த நகருக்கு அருகாமையில் உள்ள பத்ராவதியிலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஹிந்து ஆதரவு கூட்டமைப்பின் செயலாளர் ஹர்ஷாவின் கொலையால் சிவமொக்காவில் நீறு பூத்த நெருப்பு போன்ற நிலைமை நீடித்து வருவதுடன் இந்த நகருக்கு அருகாமையில் உள்ள பத்ராவதியிலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் கடை ஒன்றின் அருகில் நின்றிருந்த ஹர்ஷா என்பவர் மீது காரில் வந்த ஆசாமிகள் திடீரென தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த கொலை குறித்த தகவல் காட்டு தீ போல் பரவி சிவமொக்காவில் நேற்று இரவு முதலே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
பஜ்ரங்க் தளத்தில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஹர்ஷாவின் கொடூர கொலைக்கு பின்னால் வாடகை கொலைகாரர்கள் கை வரிசை இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கேரளா மற்றும் கடலோர பகுதிகளில் நடக்கும் அரசியல் கொலைகள் மாதிரியிலேயே இங்கும் அதே போல் கொலை நடந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை விவகாரத்தால் நகர் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு பிரிவு ஐ ஜி பி தியாகராஜ், மாவட்ட பாதுகாப்பு அதிகாரி பி.எம் லட்சுமி பிரசாத் ஆகியோர் தலைமையில், போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மேலும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காத வகையில் எச்சரிக்கை வகிக்கப்பட்டு வருகிறது. கொலைகாரர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வரும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் மும்முரமாயுள்ளனர்.
இரண்டாம் ஆண்டு பி யு சி யின் செயல்முறை தேர்வுகள் மற்றும் எஸ் எஸ் எல் சியின் தயாரிப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . பத்ராவதியில் இன்று சி ஆர் பி சி பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவுக்கு தாசீல்தார் பிரதீப் சிக்கிம் உத்தரவிட்டுள்ளார். அதே போல் பத்ராவதி நகரின் பகுதியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் எஸ் எல் சி தயாரிப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பத்ராவதி நகரம் விடுத்து கிராமந்தர பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தாசீல்தார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஹிஜாப்: உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு பிப்ரவரி 16 வரை விடுமுறை
சிவமொக்கா நகரில் நடந்த ஹிந்து ஆதரவு கூட்டமைப்புகள் செயலாளர் ஹர்ஷாவின் கொலை மற்றும் சமீபத்தில் பத்ராவதி நகரின் சில பள்ளி கல்லூரிகளில் நடந்த ஹிஜாப்-காவி சால்வை விவகாரங்களின் பின்னணியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவிர நகரின் பதட்டமான இடங்களிலும் கடும் எச்சரிக்கை வகிக்கப்பட்டு வருகிறது. இதே வேளையில் இந்த கொலை சம்பவம் குறித்து நகரின் பயணியர் விடுதியில் நிருபர்களிடம் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில் ஹர்ஷா கொலை தொடர்பாக குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிய வந்துள்ளன. யார் இந்த கொலையில் ஈடுபட்டனர் என்ற தகவல்களை போலீசார் சேகரிட்டித்து வருவதுடன் மிக விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
நான்கு முதல் ஐந்து பேர் வரை இந்த கொலையில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த கொலை குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதால் இந்த கட்டத்தில் தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கொலைக்கு பின்னணியில் கொடூர எண்ணங்கள் உள்ளது. யார் எது வேண்டுமானாலும் செய்து விட்டு தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை உறுதியாக தெரிவிப்போம்.
மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!
ஹர்ஷா சமூக சேவகனாக மிக நல்ல பணிகளை செய்துள்ளார். ஹர்ஷாவின் குடும்பத்தாரை சந்தித்து அனுதாபம் தெரிவித்துள்ளேன். பொது மக்கள் அமைதியை காப்பாற்ற வேண்டும். எந்த காரணம் கொண்டும் உணர்ச்சிவச படக்கூடாது. என்றார். நகரின் அரசு மெக்கான் மருத்துவமனையில் உள்ள ஹர்ஷாவின் இறந்த உடலை அமைச்சர் அரக ஞானேந்திரா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் இருந்த ஹர்ஷாவின் உறவினர்களை சந்தித்து பேசினார். அனைத்து விதமான தேவையான உதவிகள் செய்து தரப்படும் என குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் நம்பிக்கை அளித்தார்.
மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR