பல்லியா: வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை புகைப்படம்!

உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, புறா மற்றும் மான் போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, புறா மற்றும் மான் போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரின் புகைப்படங்கள் மாறியிருந்தன. முன்னாள் மாநில அமைச்சர் நாரத் ராய் புகைப்படத்திற்கு பதிலாக யானையின் புகைப்படமும், மற்றொருவரின் புகைப்படத்திற்கு பதிலாக மான் படமும் இடம்பெற்று இருந்தன. அதேபோல், புறா, மனிதனின் கால் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், துர்காவதி என்ற பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கல்லூரி மதிப்பெண் பட்டியலில் நடிகர்கள் புகைப்படம் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது...!