ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது ஏற்புடையது அல்ல என காஷ்மீர் வர்த்தக சங்கம் கண்டன் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக காஷ்மீர் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் பஷிர் அஹமது தெரிவிக்கையில்... 


''மத்திய அரசின் இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல, ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு மதம் தொடர்பான இயக்கம். காஷ்மீருக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது மக்களுக்காக பணியாற்றிய ஒரு மத அமைப்பு ஜமாத்-இ-இஸ்லாமி.


காஷ்மீரில் 400 பள்ளிக்கூடங்களை இந்த அமைப்பு நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மசூதிகளையும் கட்டியுள்ளனர்.


நல்லது பல செய்யும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினை தடை செய்யும் அரசாங்கம், ஏன் உண்மையிலேயே நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இயக்கங்களைத் தடை செய்வதில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னதாக கடந்த வியாழன் அன்று ஐந்தாண்டு காலத்திற்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜமாத்-இ-இஸ்லாத் இயக்கத்தை தடை செய்வதாக மத்திய அரசு உத்தரவிட்டது. காஷ்மீரில் உள்ள முக்கிய இரு அரசியல் கட்சிகளும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. 


தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார். அதேப்போல் பிடிபி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஜமாத்-இ-இஸ்லாமைத் தடை செய்வது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தார்.