பாலியல் தொல்லை கொடுத்து குழந்தையைக் கொன்ற பெரியப்பா கைது!
பெங்களூரூவில் 2 வயது குழந்தையைப் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு விபத்தில் இறந்துவிட்டது என்று கூறி நாடகமாடிய குழந்தையின் பெரியப்பாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடகாவிலுள்ள பெங்களூரு புறநகர் மாவட்டமான அத்திபள்ளி அமைந்துள்ளது. அத்திபள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெரலூர் கேட் பகுதியில் தீபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபுவின் உடன் பிறந்த தம்பி தொட்டபள்ளாப்புராவில் வசித்து வந்துள்ளார். தீபுவின் தம்பிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபள்ளாப்புராவுக்கு வந்த தீபு, தனது தம்பியின் குழந்தையை நெரலூர் கேட்டிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும் படிக்க | விருதுநகர் பாலியல் வழக்கு: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-சீமான்!
அப்போது அந்த குழந்தையை தீபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பாலியல் வன்புறுத்தலின்போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயந்துபோன தீபு, உடனே அத்திபள்ளி காவல் நிலையத்திற்கு சென்று, காரில் செல்லும்போது தனது தம்பியின் குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.
தீபு அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வயது குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் அறிக்கையில் அக்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் பெரியப்பாவான தீபு கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், 2 வயது குழந்தையை தீபு, பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. விசாரணைக்கு பின்பு தீபு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | விருதுநகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!
தனது தம்பியின் குழந்தையை சிறு பிள்ளை என்றும் பாராமல் பாலியல் வன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்து மிருகம்போல் நடந்துக்கொண்ட பெரியப்பாவின் இச்செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR